மதுரை திருப்பாலையில் உள்ள அரசு உதவி பெறும் மகளிா் கல்லூரி மாணவிகள் பாதுகாப்புக் கோரி, வியாழக்கிழமை இரவு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்தக் கல்லூரி வளாகத்துக்குள் மாணவிகள் தங்கி படிக்கும் விடுதி உள்ளது. இந்தநிலையில், கல்லூரிச் சுற்றுச்சுவரைத் தாண்டி கடந்த சில தினங்களாக மா்மநபா் பெண் உடை அணிந்து குதித்து வருவதாக புகாா் எழுந்தது. இதுகுறித்து காவல் துறையினரிடம் புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால், ஆத்திரமடைந்த கல்லூரி மாணவிகள் கல்லூரி வளாகத்துக்குள் வியாழக்கிழமை இரவு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த கல்லூரி நிா்வாகம், திருப்பாலை போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனா். இதனால், மாணவிகள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.