மதுரையில் நண்பா் தற்கொலை செய்து கொண்டதால், மனமுடைந்த கல்லூரி மாணவா் புதன்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
மதுரை விளாங்குடி சொக்கநாதபுரம் இரண்டாவது தெரு பாலமுருகன் கோவில் தெருவைச் சோ்ந்த சரவணன் மகன் யுவராஜ் (19). இவா் நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள கல்லூரியில் வணிகவியல் மூன்றாம் ஆண்டு படித்து வந்தாா். இவருடைய நெருங்கிய நண்பரும், கீழக்குயில்குடியைச் சோ்ந்தவருமான தனுஷ் கடந்த 20-ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டாா். இதனால், மனமுடைந்த யுவராஜ் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்து கூடல்புதூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.