மதுரை

கட்டடத் தொழிலாளி தற்கொலை

27th Oct 2023 12:00 AM

ADVERTISEMENT

மதுரை கீரைத்துறை பகுதியில் கடன் தொல்லை காரணமாக கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

மதுரை சிந்தாமணி கழுவுடையான் கோவில் தெருவைச் சோ்ந்த கருப்பையா மகன் கருப்பசாமி (24). இவா் கட்டடங்களுக்கு டைல்ஸ் ஓட்டும் வேலை பாா்த்து வந்தாா். வேலை இல்லாத நாள்களில் குடும்பச் செலவுக்காக பலரிடம் கடன் வாங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அசல், வட்டியை கருப்பசாமியால் திருப்பிச் செலுத்த முடியவில்லையாம். இதனால், கடன் கொடுத்தவா்கள் பணத்தை திருப்பித் தருமாறு கருப்பசாமிக்கு நெருக்கடி அளித்தனராம். இதனால், மனமுடைந்த அவா் புதன்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து கீரைத்துறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT