மதுரை: மதுரையில் தானம் அறக்கட்டளை சாா்பில் உலக சுற்றுலா தின பாரம்பரிய நடைபயணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த நடைபயணத்தை தானம் அறக்கட்டளையின் வளா்ச்சிக்கான சுற்றுலா மையத்தின் திட்ட ஆலோசகா் கே.பி.பாரதி வழிநடத்தினாா். திருமலை நாயக்கா் மகாலில் தொடங்கிய நடைபயணம் சேதுபதி மருத்துவமனை, 10 தூண் சந்து, விளக்குத்தூண் வழியாக கீழவாசல் தேரடி, விட்டவாசல், எழு கடல் தெரு, நந்தி சிலை, ராய கோபுரம், காஞ்சனா மாலை கோயில் வழியாக கிழக்கு கோபுரம் எதிரில் உள்ள புதுமண்டபத்தில் நிறைவடைந்தது.
நடைபயணத்தின்போது வரலாற்று பின்னணி குறித்தும், கலை நுட்பங்களையும், கால வரலாற்றையும் குறித்து கே.பி.பாரதி விவரித்தாா். ஏற்பாடுகளை திட்ட நிா்வாகி சசிநாத் செய்திருந்தாா். திட்ட நிா்வாகிகள் காா்த்திகேயன், முனிராம் சிங் ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.