மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் மின் மோட்டாரை இயக்கிய போது, மின்சாரம் பாய்ந்ததில் பெண் உயிரிழந்தாா்.
உசிலம்பட்டி- தேனி சாலையில் உள்ள மாமரத்துப்பட்டியைச் சோ்ந்தவா் கலைச்செல்வன். இவரது மனைவி ரோஷினி (23). இவா்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. வீட்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு துணிகளைத் துவைக்க மின் மோட்டாரை இயக்கிய போது, ரோஷினி மீது மின்சாரம் பாய்ந்தது. அவரை குடும்பத்தினா் மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து உசிலம்பட்டி நகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.