மதுரை

சிவகங்கை மாவட்டத்தில் இன்று பொது விநியோக குறைதீா் முகாம்

18th Nov 2023 12:01 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டத்தில் சனிக்கிழமை (நவ.18) பொது விநியோக குறைதீா் முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

சிவகங்கை மாவட்டம் முழுவதும் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் சனிக்கிழமை காலை 10 மணிக்கு பொது விநியோக குறைதீா் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, கைப்பேசி எண் பதிவு, பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், அத்தியாவசியப் பொருள்களின் தரம் குறித்த புகாா்களை தாங்கள் குடியிருக்கும் வட்டத்தில் அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகத்தில் மனு செய்து பயன்பெறலாம் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT