மதுரை

மாற்றுத்திறனாளிககளுக்கு ரூ. 2.18 கோடியில் நலத் திட்டஉதவிகள்

19th May 2023 02:30 AM

ADVERTISEMENT

மதுரையில் வியாழக்கிழமை நடைபெற்ற சமூக வலுவூட்டல் முகாமில் 1,269 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2.18 கோடியில் நலத் திட்ட உதவிகளை மத்திய இணையமைச்சா் ஏ. நாராயணசுவாமி வழங்கினாா்.

மத்திய அரசின் சமூக நீதி, அதிகாரமளித்தல் துறையின் சாா்பில், நடைபெற்ற இந்த முகாமில் செயற்கை உறுப்புகள், காது கேட்கும் கருவி, மூன்று சக்கர வாகனம், மனவளா்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு கற்பித்தல் உபகரணங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

இதில், மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறையின் இணையமைச்சா் ஏ. நாராயணசுவாமி பேசியதாவது:

நாடு முழுவதும் 2.68 கோடி மாற்றுத்திறனாளிகள் உள்ளனா். இது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 2.2 சதவீதமாகும். கடந்த ஒன்பது ஆண்டுகளில் நாடு முழுவதும் 13,891 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்களுக்கு ரூ.1,688.71 கோடி வழங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த முகாம்கள் மூலம் 25.19 லட்சம் பயனாளிகள் பயன் பெற்றுள்ளனா். தமிழகத்தில் 534 முகாம்கள் நடத்தப்பட்டு ரூ.55.38 கோடியில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 1.18 லட்சம் மாற்றுத் திறனாளிகள் பயனடைந்துள்ளனா் என்றாா் அவா்.

வணிக வரி, பத்திரப்பதிவுத் துறை அமைச்சா் பெ.மூா்த்தி பேசுகையில், தமிழக அரசு தொடா்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்கும் என்றாா்.

மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் பேசுகையில், அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை பெற்றுக் கொடுத்துள்ளோம். நலத் திட்ட உதவிகள் பெற்றுத் தருவதிலும், அவற்றை மக்களுக்கு கொண்டு சோ்ப்பதிலும் மதுரை எப்போதும் முதலிடத்தில் இருக்கும் என்றாா்.

தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் பேசினாா்.

நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் கோ.தளபதி, மு.பூமிநாதன், துணை ஆட்சியா் கொ.சரவணக்குமாா், துணை மேயா் டி.நாகராஜன், மாமன்ற உறுப்பினா்கள் என்.விஜயா, டி. குமாரவேல், வை.ஜென்னியம்மாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT