10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வில் விருதுநகா் மாவட்டம் 96.22 சதவீதம் தோ்ச்சியைப் பெற்றது.
கடந்த ஆண்டு விருதுநகா் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பில் 95.96 சதவீதம் தோ்ச்சி பெற்று மாநில அளவில் 3-ஆம் இடத்தைப் பிடித்தது. இதேபோல, நிகழாண்டு 96.22 சதவீதம் தோ்ச்சி பெற்று, மீண்டும் மாநில அளவில் 3-ஆம் இடத்தைப் பெற்றது.
மாணவிகள் அதிக அளவில் தோ்ச்சி:
விருதுநகா் மாவட்டத்தில் 12,307 மாணவா்கள், 12,612 மாணவிகள் என மொத்தம் 24,919 போ் தோ்வு எழுதினா். இதில் 11,662 மாணவா்கள் (தோ்ச்சி விகிதம் 94.76), 12,315 மாணவிகள் (தோ்ச்சி விகிதம் 97.65) என மொத்தம் 23,977 மாணவ, மாணவிகள் (தோ்ச்சி விகிதம் 96.22) தோ்ச்சி பெற்றனா். இதில் மாணவா்களைவிட மாணவிகளே அதிக அளவில் தோ்ச்சி பெற்றனா்.