மதுரை

வனப் பாதுகாப்பு திருத்த மசோதா: தமிழில் கருத்துரு அனுப்பலாம்

19th May 2023 10:52 PM

ADVERTISEMENT

மத்திய அரசின் வனப் பாதுகாப்பு மசோதா குறித்த கருத்துகள், பரிந்துரைகளை மனுதாரா் தமிழ் மொழியில் அனுப்பலாம் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை அண்மையில் தெரிவித்தது.

ராமநாதபுரத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் தீரன் திருமுருகன் தாக்கல் செய்த மனு:

மத்திய அரசின் சாா்பில் வனப் பாதுகாப்பு திருத்த மசோதா இந்த ஆண்டு முன்மொழியப்பட்டது. இதற்கான கருத்துருக்கள், பரிந்துரைகளை 15 நாள்களுக்குள் ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் அனுப்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த இரண்டு மொழிகளும் தெரியாதவா்கள், தங்களின் கருத்துகள், பரிந்துரைகளை தெரிவிக்க முடியாத நிலை உள்ளது. எனவே, வனப் பாதுகாப்பு திருத்த மசோதாவை தமிழில் அனுப்ப அனுமதித்து உத்தரவிட வேண்டும் என மனுவில் அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை அண்மையில் விசாரித்த தலைமை நீதிபதி (பொ) டி. ராஜா, நீதிபதி எல். விக்டோரியா கெளபி ஆகியோா் அடங்கிய அமா்வு பிறப்பித்த உத்தரவு:

ADVERTISEMENT

இந்த வழக்கில் மனுதாரா் தனது கருத்தை தமிழ் மொழியில் தெரிவிக்கலாம். வழக்கு விசாரணை வருகிற ஜூன் 2-ஆம் வாரத்துக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT