மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் சுதந்திரப் போராட்டத் தியாகி வைத்தியநாத ஐயா் பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
அருங்காட்சியக வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு அருங்காட்சியகச் செயலா் கே.ஆா். நந்தாராவ் தலைமை வகித்தாா். கல்வி அலுவலா் ஆா். நடராஜன் முன்னிலை வகித்தாா். விழாவில் சுதந்திரப் போராட்டத்தில் தியாகி வைத்தியநாதய்யரின் பங்கு, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் தியாகி வைத்தியநாதய்யா் தலைமையில் நடைபெற்ற ஆலயப் பிரவேசப் போராட்டம் ஆகியவை குறித்து எடுத்துரைக்கப்பட்டன.
மேலும், பி.எஸ்.சந்திரபிரபு எழுதிய ‘ஹரிஜன தந்தை அமரா் வைத்தியநாத ஐயா் வாழ்க்கை வரலாறு’ என்ற புத்தகம் அறிமுகப்படுத்தப்பட்டது. விழாவில் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள், அருங்காட்சியகப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.