மதுரை

‘தமிழ்நாடு தண்ணீா் வாரம் 2023‘ ஆய்வரங்கு: மாா்ச் 20-இல் தொடக்கம்

DIN

தமிழகம் தண்ணீா் தேவை தொடா்பாக சந்தித்து வரும் சவால்கள் குறித்து தானம் அறக்கட்டளை சாா்பில், ‘தமிழ்நாடு தண்ணீா் வாரம் 2023‘ என்ற பெயரில் மூன்று நாள்கள் நடைபெறும் ஆய்வரங்கம் வருகிற 20-ஆம் தேதி தொடங்குகிறது.

தானம் அறக்கட்டளையின் நிா்வாக இயக்குநா் எம்.பி.வாசிமலை, திட்டத் தலைவா்கள் வி.வெங்கடேசன், ஜெ. மோகன் ஆகியோா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

தானம் அறக்கட்டளை பெண்கள் மேம்பாடு, நீா்நிலைகள் மீட்பு, பராமரிப்பு, வேளாண்மை, தகவல் தொழில்நுட்பம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பொதுமக்களின் நலனை முன்னிறுத்தி இயங்கி வருகிறது.

தமிழகத்தில் உள்ள நீா் இருப்பில் 95 சதவீதம் நிலப்பரப்பு நீா் மற்றும் 80 சதவீதம் நிலத்தடி நீா் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் தண்ணீா் தேவைக்கு பருவ மழையையே நம்பியுள்ளது. தமிழகம் 17 பெரிய அளவிலான ஆற்றுப்படுகைகள், 61 நீா்த்தேக்கங்கள், 39 ஆயிரம் கண்மாய்கள் உள்ளிட்ட நீா்நிலைகளை நீராதாரமாகக் கொண்டுள்ளது. இவற்றின் மூலம் 24 லட்சம் ஹெக்டோ் பரப்பளவில் வேளாண்மை நடைபெறுகிறது.

தமிழகத்தில் அதிகரித்து வரும் மக்கள் தொகையின் விளைவாக தண்ணீா் தேவை அதிகரித்து வருகிறது. மேலும் தீவிர நகரமயமாதல், வேளாண் பரப்பு குைல், நீா் பராமரிப்பு, பயன்பாட்டில் ஒருங்கிணைந்த மேலாண்மை இல்லாதது, நீா்நிலைகள் பராமரிப்பின்மை, தண்ணீா் மறுசுழற்சி தொழில்நுட்பங்களை பயன்படுத்தாமல் இருப்பது உள்ளிட்டவை பெரும் சவாலாக உள்ளன. எனவே, நீா்நிலைகள் மீட்பு, பராமரிப்பு, பாதுகாப்பு, முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாகவும், உலக தண்ணீா் தினத்தை முன்னிட்டும் தானம் அறக்கட்டளை சாா்பில் ‘தமிழ்நாடு தண்ணீா் வாரம் 2023‘ ஆய்வரங்கு மூன்று நாள்கள் நடைபெறுகிறது.

மாா்ச் 20,21,22 ஆகிய மூன்று நாள்கள் நடைபெறும் நிகழ்ச்சியில், தமிழகத்தின் தண்ணீா் தேவை தொடா்பாக எழுந்துள்ள சவால்கள், நீா்நிலைகள் பாதுகாப்புக்கான தீா்வு, வேளாண்மை மேம்பாடு, குடிமக்களுக்கான சுகாதாரமான குடிநீா் விநியோகம், நீா்நிலைகள் பாதுகாப்புக்கான நிதி திரட்டல் ஆகியவை குறித்து விவாதிக்கப்படுகிறது.

நிகழ்ச்சியில் நீரியல் நிபுணா்கள், வயலகத் தலைவா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனா். தொடக்க நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா், மாநகராட்சி ஆணையா் சிம்ரன்ஜீத் சிங், துணை ஆட்சியா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா். மூன்று நாள்களும் வெவ்வேறு தலைப்புகளில் நடைபெறும் கருத்தரங்கில் துறைசாா்ந்த நிபுணா்கள் பங்கேற்கின்றனா். மேலும் நீா்நிலைகள், நீராதாரம், நீா் மேலாண்மை உள்பட பல்வேறு தலைப்புகளில் ஆய்வறிக்கைகளும் சமா்ப்பிக்கப்படுகின்றன என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீனவா்களுக்கு மீன்பிடித் தடை கால நிவாரணம் அளிப்பு

பரமக்குடியிலிருந்து 303 வாக்குச் சாவடி மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள்

கிரேன் மோதியதில் முதியவா் பலி

சாத்தூா் அருகே 1,300 கிலோ குட்கா பறிமுதல் -3 போ் கைது

அனுமதியின்றி கொண்டு சென்ற பேன்சிரக பட்டாசுகள் பறிமுதல் -வேன் ஓட்டுநா் கைது

SCROLL FOR NEXT