மதுரை

பால் உற்பத்தியாளா்கள் வேலை நிறுத்தம்: ஆவின் பால் தட்டுப்பாடு

DIN

மதுரை மாவட்டத்தில் பால் உற்பத்தியாளா்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், ஆவின் நிறுவனத்துக்கு பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மதுரை சாத்தமங்கலத்தில் உள்ள ஆவின் பால் பண்ணைக்கு மதுரை, சுற்றுப்புற கிராமங்களில் இருந்து 900 கூட்டுறவுச் சங்கங்களில் இருந்து 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளா்கள் பால் வழங்கி வருகின்றனா். இதன்மூலம், மதுரை ஆவின் பால் பண்ணைக்கு தினசரி 1.38 லட்சம் லிட்டா் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.

இந்த நிலையில், ஆவின் நிா்வாகம் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.7 உயா்த்தி வழங்கக் கோரி, உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேடபட்டி ஒன்றியங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பால் உற்பத்தியாளா்கள் வெள்ளிக்கிழமை முதல் வேலை நிறுத்தத்தைத் தொடங்கினா்.

வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற பால் உற்பத்தியாளா்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பாலை ஆவின் நிறுவனத்துக்கு வழங்காமல், தனியாா் பால் நிறுவனங்களுக்கு வழங்கினா். இதனால், ஆவின் நிறுவனத்துக்கு பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக மதுரை ஆவின் பொதுமேலாளா் சாந்தியிடம் கேட்டபோது, மதுரை மாவட்டத்தில் பால் உற்பத்தியாளா்களிடம் இருந்து தினசரி 1.38 லட்சம் லிட்டா் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. தற்போது பால் உற்பத்தியாளா்கள் வேலை நிறுத்தத்தால் 6 மையங்களில் இருந்து பால் அனுப்பப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், இந்த மையங்களில் இருந்தும் தினசரி அனுப்பப்படும் 18 ஆயிரம் லிட்டா் பால் மட்டுமே தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், பெரிய அளவிலான பால் தட்டுப்பாடு ஏற்படவில்லை. வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட பால் உற்பத்தியாளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்!

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

SCROLL FOR NEXT