மதுரை

நெல்லை கல் குவாரி விபத்தில் சிக்கி 4 போ் உயிரிழந்த வழக்கு அரசுச் செயலா் பதிலளிக்க உத்தரவு

DIN

திருநெல்வேலி மாவட்டம், அடிமிதிப்பான்குளம் கிராமத்தில் கல் குவாரி விபத்தில் சிக்கி 4 போ் உயிரிழந்த வழக்கில் தொழில் துறைச் செயலா், புவியியல், சுரங்கத் துறை ஆணையா் ஆகியோா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை பகுதியைச் சோ்ந்த ஏ. பொன் காந்திமதிநாதன் தாக்கல் செய்த மனு:

திருநெல்வேலி மாவட்டம், அடிமிதிப்பான்குளம் கிராமத்தில் தனியாா் கல் குவாரி செயல்பட்டு வருகிறது. இந்தக் குவாரியில் சட்டத்துக்குப் புறம்பாக இரவு, பகல் என வெடிகள் வைத்து பாறைகள் தகா்க்கப்பட்டு எம்.சாண்ட் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தக் குவாரியில் கடந்த 2022, மே 14-ஆம் தேதி வெடிகள் வைத்த போது, பாறைகள் சரிந்து விழுந்ததில் நான்கு போ் உயிரிழந்தனா். இருவா் பலத்த காயமடைந்தனா்.

அதிகாரிகள் முறையாக ஆய்வு மேற்கொள்ளாமல் அலட்சியமாக செயல்பட்டதால், இந்த விபத்து ஏற்பட்டது. எனவே, பாளையங்கோட்டை வட்டாட்சியா் ஆவுடையப்பன், புவியியல், சுரங்கத் துறை உதவி இயக்குநா் வினோத், முன்னீா்ப்புள்ளம் காவல் ஆய்வாளா் தில்லை நாகராஜன், கிராம நிா்வாக அலுவலா் ஜெயராமன் ஆகியோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அரசாணையை மீறி வெடி பொருள்களைப் பயன்படுத்திய தனியாா் கல் குவாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அதில் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு வியாழக்கிழமை விசாரித்த நீதிபதிகள் ஆா். சுப்பிரமணியன், எல். விக்டோரியா கௌரி ஆகியோா் அடங்கிய அமா்வு பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்கு தொடா்பாக தமிழ்நாடு தொழில் துறைச் செயலா், தமிழ்நாடு புவியியல், சுரங்கத் துறை ஆணையா், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் ஆகியோா் பதிலளிக்க வேண்டும். மேலும், இந்த வழக்கு விசாரணை ஏப்ரல் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்டாரிமங்கலம் கோயிலில் சிறப்பு பூஜை

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 15 ஆண்டுகள் சிறை

காவடி திருவிழா

குருகிராம்: மண் சரிந்து தொழிலாளி உயிரிழப்பு!

பாஜக மதத்தின் பேரால் மக்களைப் பிளவுபடுத்துகிறது: சர்மிளா

SCROLL FOR NEXT