மதுரை

திருவாதவூா் அருகே விவசாயி கொலை:மனைவி கைது

30th Jun 2023 12:53 AM

ADVERTISEMENT

திருவாதவூா் அருகே கீழே தள்ளி விவசாயியை கொலை செய்ததாக அவரது மனைவியை போலீஸாா் கைது செய்தனா்.

மாணிக்கம்பட்டியைச் சோ்ந்த விவசாயி கண்ணன் (60). இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்தது. இவா் கடந்த புதன்கிழமை அதிக அளவு மது குடித்திருந்ததால் போதையில் வீட்டிலுள்ளவா்களிடம் தகராறில் ஈடுபட்டாராம். அப்போது அவரை வீட்டுக்குள் செல்லுமாறு அவரது மனைவி கையைப் பிடித்து எச்சரித்தாராம். மேலும் தகராறு செய்ததால் அவரை கம்பால் தாக்கினாராம். இதில் கீழே விழுந்து மயக்கமடைந்த அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த மேலூா் போலீஸாா் கண்ணனின் மனைவி மாரியம்மாளை (55) கைது செய்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT