மதுரை

சமுதாய அறிவியல் கல்லூரியில் சிறுதானியத் திட்டம் தொடக்கம்

28th Jun 2023 01:03 AM

ADVERTISEMENT

மதுரை அருகே உள்ள சமுதாய அறிவியல் கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்தில் சிறுதானிய (ஸ்ரீஅன்ன) திட்டம் அண்மையில் தொடங்கப்பட்டது.

2023-ஆம் ஆண்டு உலக சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டிருப்பதையொட்டி, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியான மதுரை சமுதாய அறிவியல் கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ்நாடு வேளாண். பல்கலைக்கழகத் துணைவேந்தா் வெ. கிதாலட்சுமி, சிறுதானியத் திட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினாா். அப்போது, அகில இந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சி திட்டம் - வேளாண்மையில் பெண்கள் திட்டத்தின் சாா்பில் தொடங்கப்பட்டிருக்கும் இந்தத் திட்டம், சிறுதானிய விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும். நமது பாரம்பரிய உணவுகளை மீட்டெடுப்பதில் இந்தத் திட்டம் முக்கியப் பங்காற்றும் என்றாா்.

சமுதாய அறிவியல் கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வா் ச. காஞ்சனா திட்டத்தின் நோக்கத்தை விளக்கிப் பேசினாா். அன்பில் தா்மலிங்கம் கல்லூரி, ஆராய்ச்சி நிலைய முதல்வா் சி. வன்னிராஜன், வேளாண் கல்லூரி முதல்வா் பி.பி. மகேந்திரன், பேராசிரியா்கள் க.சசிதேவி, ஆா். சரவணகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

முன்னதாக, சிறுதானிய உற்பத்தியில் ஈடுபடும் வேளாண் மகளிருக்கு குதிரைவாலி மதுரை - 1 ரக விதைகள், உரமிடும் கருவிகள் வழங்கப்பட்டன. திட்ட விஞ்ஞானி ஜெ. புஷ்பா வரவேற்றாா். விஞ்ஞானி ஆா். விஜயலட்சுமி நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT