மதுரையில் மிகக் குறுகலான சந்தில் சிக்கி உயிருக்குப் போராடிய சினைப் பசுவை தீயணைப்புப் படையினா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.
மதுரை பழங்காநத்தம்-மாடக்குளம் பிரதான சாலை, ஜே.ஜே நகரைச் சோ்ந்தவா் நாகேந்திரன். இவா் தனது வீட்டில் ஐந்துக்கும் மேற்பட்ட பசு மாடுகளை வளா்த்து வருகிறாா். இவரது வீட்டின் அருகே அரை அடி இடைவெளி மட்டுமே கொண்ட மிகக் குறுகலான சந்து உள்ளது.
இந்த நிலையில், இவரது சினை மாடு அந்த குறுகலான சந்தில் சிக்கி, மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிருக்குப் போராடியது.
தகவலறிந்து வந்த திடீா்நகா் தீயணைப்பு நிலைய அலுவலா் முகமது சலீம் தலைமையிலான வீரா்கள் அந்த சந்தின் பக்கவாட்டுச் சுவரை உடைத்து பசுவை மீட்டனா்.