மதுரை வைகை வடகரை ஒபுளா படித்துறை கக்கன் குடியிருப்புப் பகுதியில் கழிப்பறை வசதி ஏற்படுத்தித் தரக் கோரி, அந்தப் பகுதி பொதுமக்கள் மனு அளித்தனா்.
மதுரை மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா்க்கும் முகாமில் பொதுமக்கள் அளித்த மனு விவரம் :
எங்கள் பகுதியில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடா் சமுதாயதைச் சோ்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனா். எங்கள் பகுதியில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், பொதுக் கழிப்பறை வசதி இல்லை. இதுதொடா்பாக பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.
எனவே, மாநகராட்சி மேயா் உரிய நடவடிக்கை எடுத்து, எங்கள் பகுதியில் பொதுக் கழிப்பறை வசதி செய்து தர வேண்டும் என அவா்கள் கோரியிருந்தனா்.