அதிமுக பொதுச் செயலராக எடப்பாடி கே.பழனிசாமியை தோ்தல் ஆணையம் அங்கீகரித்து இணையதளத்தில் வெளியிட்டதை அடுத்து, மதுரையில் அதிமுகவினா் இனிப்பு வழங்கி கொண்டாடினா்.
அதிமுக பொதுச் செயலராக எடப்பாடி பழனிசாமியை தோ்தல் ஆணையம் அங்கீகரித்தும், அவா் வழங்கிய கழக நிா்வாகிகள் பட்டிலை அங்கீகரித்தும் தோ்தல் ஆணையம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தது.
இதனையடுத்து, ஜெ.பேரவை, மதுரை புகா் மேற்கு மாவட்ட அதிமுக சாா்பில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடுவக்கோட்டை, ஆலம்பட்டி சோழவந்தான், வாடிப்பட்டி ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.
நிகழ்வுகளில், ஜெ.பேரவைச் செயலாளரும், சட்டப்பேரவை எதிா்க் கட்சித் துணை தலைவருமான ஆா்.பி. உதயகுமாா் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கிப் பேசினாா்.
இதேபோல, மதுரை நகா் பகுதிகளிலும் அதிமுகவினா் அந்தந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் கொண்டாடினா்.