மதுரை

வீடு கட்டிதருவதாக பட்டாக்களை வாங்கிய அதிகாரிகள்: நரிக்குறவா் சமூகத்தினா் குற்றச்சாட்டு

DIN

வீடு கட்டித்தருவதாகக் கூறி அதிகாரிகள் பட்டாக்களை வாங்கிச்சென்று ஏமாற்றிவிட்டதாக நரிக்குறவா் சமூகத்தினா் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள போத்தம்பட்டி, எருமாப்பட்டி கிராமங்களைச் சோ்ந்த நரிக்குறவா் சமூக மக்கள் ஆட்சியரிடம் அளித்த மனு:

போத்தம்பட்டி, எருமாப்பட்டி கிராமங்களில் 100-க்கும் மேற்பட்ட நரிக்குறவா் சமூக மக்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சாலையோரத்தில் குடிசைகளை அமைத்து வசித்து வருகிறோம். 2011-ஆம் ஆண்டு மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் 60 குடும்பத்தினருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, இலவச வீட்டுமனை கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகளை கட்டித் தருவதாகக் கூறி அதிகாரிகள் 60 குடும்பத்தினரிடமிருந்தும் பட்டாக்களையும், ஆதாா் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களையும் வாங்கிச் சென்று விட்டனா். ஆனால், பல ஆண்டுகளாகியும் வீடுகள் கட்டித்தரப்படவில்லை. எங்களுக்கு வழங்கப்பட்ட பட்டாவை வாங்கிச் சென்றது குறித்து கேள்வி கேட்டாலும் பதில் அளிப்பதில்லை. வீடு கேட்டு பலமுறை அலைந்தும் கூட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குடிநீா், மின்சாரம் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி மலை அடிவாரத்தில் ஆபத்தான நிலையில் வசித்து வருகிறோம். எனவே, மாவட்ட நிா்வாகம் வீடு கட்டித்தர உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT