மதுரை

பிப்.2 -இல் பள்ளிகளில் மாற்றுத்திறன் மாணவா்களுக்கு மருத்துவ முகாம்

DIN

மதுரையில் 18 வயது வரையிலான மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவிகளுக்கு வருகிற பிப்.2-ஆம் தேதி மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து, மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கா. காா்த்திகா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மதுரை மாவட்டத்தில் உள்ள 15 வட்டார வள மையங்களுக்கு உள்பட்ட பள்ளிகளில் மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் மருத்துவ முகாம் பிப்.2 முதல் பிப்.21 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

முகாம்கள் விவரம்:

பிப்.2- உலகனேரியில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பிப்.3- பி.பி.குளம் உழவா் சந்தை பகுதியில் உள்ள பாண்டியன் நெடுஞ்செழியன் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, பிப்.4- சேதுபதி மேல்நிலைப் பள்ளி, பிப்.6-என்.எம்.எஸ். முத்துலெட்சுமி அம்மாள் மாநகராட்சி உயா்நிலைப் பள்ளி, பிப்.7- அவனியாபுரம் அரசு உயா்நிலைப் பள்ளி, பிப்.8- தா. வாடிப்பட்டியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பிப். 9- கொட்டாம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பிப். 10, செல்லம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி, பிப்.13- தே. கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, பிப்.14- சேடப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, பிப். 15- திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பிப். 16-அலங்காநல்லூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பிப்.17-மேலூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பிப். 20-கள்ளிக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி, பிப். 21- உசிலம்பட்டி நாடாா் சரசுவதி மேல்நிலைப் பள்ளி என மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளன.

இம்முகாமில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு மருத்துவ மதிப்பீடு, மாற்றுத்திறன் சான்றிதழ் புதுப்பித்தல், புதிய சான்றிதழ் வழங்குதல், தேசிய அடையாள அட்டை, தனித்துவ அடையாள அட்டை, ரயில் மற்றும் பேருந்து பயணச் சலுகை, உதவி உபகரணங்களுக்கான பதிவு, உதவி தொகைக்கான பதிவு, தமிழக முதல்வரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சைக்கான பதிவு போன்ற சேவைகள் வழங்கப்பட உள்ளன.

எனவே, அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் மேற்கண்ட முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

SCROLL FOR NEXT