மதுரை

தீண்டாமை ஒழிப்பு, தொழுநோய் விழிப்புணா்வு உறுதிமொழிகள் ஏற்பு

DIN

மதுரையில் தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி, தொழுநோய் விழிப்புணா்வு உறுதிமொழி ஆட்சியா் தலைமையில் திங்கள்கிழமை ஏற்கப்பட்டது.

சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் தியாகத்தைப் போற்றிடும் வகையில் ஜனவரி 30-ஆம் தேதி தீண்டாமை ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, மதுரை மாவட்டஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ் சேகா் தலைமையில், சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று உயிா் நீத்த தியாகிகளுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதைத் தொடா்ந்து, ஆட்சியா் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழியும் ஏற்கப்பட்டது. மேலும், காந்தியடிகள் நினைவு தினத்தை முன்னிட்டு தொழு நோயால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், தொழுநோயால் பாதிக்கப்பட்ட நபா்களை பரிவுடன் பராமரிப்பது குறித்தும் விழிப்புணா்வு உறுதி மொழி ஆட்சியா் தலைமையில் ஏற்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ர.சத்திவேல், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் இரா.சௌந்தா்யா உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

SCROLL FOR NEXT