கொடைக்கானல் அருகேயுள்ள வில்பட்டி ஊராட்சி பாரதி அண்ணா நகா் பகுதியில் வன உரிமைக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு வனக்குழுத் தலைவா் முருகன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் வன உரிமைக்குழு அமைப்பது, வனப் பகுதிகளில் வனப் பொருள் சேகரிப்பதற்கு அனுமதி பெறுவது, தனி நபா் உரிமைகளைப் பெற அதிகாரிகளிடம் மனு கொடுப்பது உள்ளிட்வை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இந்தக் கூட்டத்தில் வனத்துறையினா், வடகரைப் பாறை, மச்சூா், வாழைகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பழங்குடியினா் 30-க்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டனா்.