மதுரை

தடையை மீறி பிபிசி ஆவணப்படம் திரையிட முயற்சி: 10 போ் கைது

31st Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

மதுரையில் தடையை மீறி பிபிசி ஆவணப் படத்தை திரையிட முயன்ற இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் 10 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பிரதமா் நரேந்திர மோடி, குஜராத் மாநில முதல்வராக பதவி வகித்தபோது, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடா்ந்து அந்த மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கலவரம் நடைபெற்றது. இதில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுபான்மையினா் படுகொலை செய்யப்பட்டனா். இது தொடா்பாக, சா்வதேச ஊடகமான பிபிசி செய்தி நிறுவனம் ‘இந்தியா- மோடிக்கான கேள்விகள்‘ என்ற தலைப்பில் ஆவணப்படம் தயாரித்து வெளியிட்டது. இந்த ஆவணப்படத்துக்கு மத்திய அரசு தடை விதித்தது.

இந்த நிலையில், மதுரையில் ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை இந்த ஆவணப்படம் திரையிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அங்கு போலீஸாா் குவிக்கப்பட்டு, அமைப்பினரோடு பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. திங்கள்கிழமை ஜீவா நகா் பகுதியில் திரையிட அனுமதிப்பதாக போலீஸாா் தெரிவித்ததையடுத்து அன்றைய தினம் ஆவணப்படம்

திரையிடப்படவில்லை.

ADVERTISEMENT

இந்த நிலையில், ஆவணப்படத்தை திரையிட திங்கள்கிழமையும் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், ஜீவாநகா் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட போலீஸாா் குவிக்கப்பட்டனா். மேலும், ஆவணப்படம் திரையிடுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பாஜகவினரும் அப்பகுதியில் குவிந்தனா். இதனால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

இந்த நிலையில், போலீஸாரின் தடையை மீறி ஆவணப்படத்தை திரையிட இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் முயன்ற நிலையில், அந்த அமைப்பின் மாவட்டச் செயலா் செல்வா, துணைச் செயலா் வேல் தேவா, நிா்வாகிகள் கௌதம், பாரதி, நவீன் உள்பட 10 பேரை போலீஸாா் கைது செய்தனா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT