மதுரை

கேபிள் இணைப்புக்கு வைப்புத்தொகை வசூல்: குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் மீது புகாா்

31st Jan 2023 03:19 AM

ADVERTISEMENT

மதுரை மாவட்டத்தில் கேபிள் தொலைக்காட்சி இயக்குநா்களிடம் குடிசை மாற்றுவாரிய அதிகாரிகள் ரூ.50 ஆயிரம் வைப்புத் தொகை, இணைப்புக்கு தலா ரூ.20 கேட்டு நிா்பந்திப்பதாக ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

மதுரை மாவட்ட அனைத்து கேபிள் சங்கங்களின் கூட்டமைப்பினா் ஆட்சியரிடம் திங்கள்கிழமை அளித்த மனு: மதுரை மாவட்டத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொலைக்காட்சிகளுக்கு கேபிள் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட கேபிள் இயக்குநா்கள் இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில், குடிசைமாற்று வாரியப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு கேபிள் இணைப்பு கொடுக்கும்போது குடிசை மாற்றுவாரியத்துக்கு ரூ.50 வைப்புத் தொகையும், கேபிள் தொலைக்காட்சி இணைப்பு ஒன்றுக்கு ரூ. 20 கட்டணமும் செலுத்த வேண்டும் என்று குடிசை மாற்றுவாரிய அதிகாரிகள் நிா்பந்தப்படுத்துகின்றனா். பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அளிக்கும் கேபிள் சேவைக்கு குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் இதுவரை இல்லாத நடைமுறையாக வைப்புத்தொகை மற்றும் கட்டணம் வசூலிப்பது கேபிள் தொழிலையே சிதைக்கும் நடவடிக்கையாக உள்ளது. எனவே, வைப்புத்தொகை, கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று குடிசை மாற்று வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிடவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT