சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் ஒருவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
மதுரை அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் ஆஷிா் சுதாகர்ராஜ் (56) என்பவரை தல்லாகுளம் மகளிா் போலீஸாா் கைது செய்தனா். இது தொடா்பான வழக்கு மதுரை போக்சோ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் ஆஷிா் சுதாகர்ராஜ்-க்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.11 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி மதுரம் கிருபாகரன் திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.