மதுரை

தேவகோட்டை அருகே மஞ்சு விரட்டு: மாவட்ட ஆட்சியா் பரிசீலிக்க உத்தரவு

31st Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

நகரம்பட்டியில் வடமாடு மஞ்சு விரட்டு நடத்துவது தொடா்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பரிசீலிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த வினோத்ராஜ் தாக்கல் செய்த மனு:

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே உள்ள நகரம்பட்டி கிராமத்தில் ஆண்டுதோறும் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பிப். 2 அன்று வடமாடு மஞ்சுவிரட்டு நடத்துவது என்று கிராம மக்கள் முடிவு செய்தனா்.

இதன்படி, இந்த ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் பதில் அளிக்கவில்லை. அரசு வகுத்துள்ள விதிமுறைகளின் படியே வடமாடு மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டு வருகிறது. எனவே, நகரம்பட்டியில் வடமாடு மஞ்சு விரட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தாா்.

ADVERTISEMENT

இந்த மனு நீதிபதிகள் டி. கிருஷ்ணகுமாா், ஆா். விஜயகுமாா் அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் நகரம்பட்டி வடமாடு மஞ்சுவிரட்டு இடம்பெறவில்லை என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மனுதாரா், சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் மீண்டும் மனு அளிக்கவும், அந்த மனுவை சட்டத்துக்கு உள்பட்டு ஆட்சியா் பரிசீலிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT