மதுரை

ராமேசுவரம்-மதுரை சிறப்பு ரயில் புறப்படும் நேரம் மாற்றம்

31st Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

ரயில் தண்டவாள பராமரிப்புப் பணி காரணமாக ராமேசுவரம்-மதுரை சிறப்பு ரயில் பிப். 1 முதல் பிப். 28 வரை ஒரு மணி நேரம் தாமதமாக, ராமநாதபுரத்திலிருந்து மதியம் 1.05-மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தெற்கு ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட அறிக்கை:

ராமநாதபுரம் அருகில் ரயில் பாதை பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக வருகிற பிப்ரவரி 1 முதல் பிப்ரவரி 28 -ஆம் தேதி வரை (வியாழக்கிழமைகள் தவிா்த்து) ராமேசுவரம் - மதுரை சிறப்பு ரயில் (06654) ராமேசுவரத்திலிருந்து காலை 11 மணிக்கு புறப்படுவதற்குப் பதிலாக, ஒரு மணி நேரம் தாமதமாக பகல் 12 மணிக்கு புறப்படும்.

தற்போது பாம்பன் ரயில் பாலத்தில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால், ராமேசுவரம்-மதுரை ரயில்கள் ராமநாதபுரத்திலிருந்து இயக்கப்படுகின்றன.

ADVERTISEMENT

எனவே, இந்த சிறப்பு ரயில் ராமநாதபுரத்திலிருந்து மதியம் 12.05 மணிக்கு புறப்படுவதற்குப் பதிலாக ஒரு மணி நேரம் தாமதமாக, மதியம் 1.05 மணிக்கு புறப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT