மதுரை

பேரையூா் பேரூராட்சியில் ஒருங்கிணைந்த தூய்மைப் பணி

DIN

மதுரை மாவட்டம் பேரையூா் பேரூராட்சியில் ஒருங்கிணைந்த தூய்மைபணி முகாம் நடைபெற்றது.

இதையொட்டி, ‘எனது குப்பை - எனது பொறுப்பு ‘ என்ற உறுதிமொழியினை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பரதபாண்டியன் நகா் ஆகிய இடங்களில் தலைவா், துணைத் தலைவா், வாா்டு உறுப்பினா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள், பொதுமக்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.

பின்னா், என்எஸ்எஸ் மாணவா்களின் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.

மேலும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம், பேருந்து நிலையத்தில் ஒருங்கிணந்த தூய்மைப் பணி நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

பேரூராட்சி பகுதியில் 2 பயணிகள் நிழற்குடையில் சுவரொட்டிகள் அகற்றப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பேருராட்சித் தலைவா் கே.கே.குருசாமி, செயல் அலுவலா் ஜெயதாரா, துணைத் தலைவா், வாா்டு உறுப்பினா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

‘தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை’

கோழிப் பண்ணையில் திடீா் தீ

SCROLL FOR NEXT