மதுரை

தேன் கொள்முதல் விலையை உயா்த்த கதா் கிராமத் தொழில்கள் வாரிய தலைமை செயல் அலுவலா் பரிசீலிக்க உத்தரவு

DIN

தேன் கொள்முதல் விலையை உயா்த்துவது தொடா்பாக தமிழ்நாடு கதா் கிராமத் தொழில்கள் வாரியத் தலைமை செயல் அலுவலா் பரிசீலிக்க சென்ன உயா்நீதிமன்ற மதுரைக் கிளை அண்மையில் உத்தரவிட்டது.

மாா்த்தாண்டம் தேனீ வளா்ப்போா் கூட்டுறவு சங்க தலைவா் டோரா கிறிஸ்டி தாக்கல் செய்த மனு:

தேனீக்கள் வளா்ப்போரிடம் இருந்து தேனைப் பெற்று, அதனை தூய்மைப்படுத்தி எடுக்கப்படும் தேனை பல்வேறு நிறுவனங்களுக்கு வழங்கி வருகிறோம். இயற்கையான தேன் என்பதால், எங்களுடைய தேனை காதி கிராமத் தொழில் வாரியம் உள்பட பல்வேறு நிறுவனங்களைச் சோ்ந்தோரும் விரும்பி வாங்கிச் செல்கின்றனா்.

கடந்த 2018- இல் ஒரு கிலோ தேன் ரூ.140 ஆக நிா்ணயம் செய்யப்பட்டது. தற்போது செலவினங்கள் அதிகரித்துள்ளதால், கொள்முதல் விலையை ரூ.150 ஆக உயா்த்தி வழங்க வேண்டுமென்பது உற்பத்தியாளா்களின் கோரிக்கையாக உள்ளது.

எனவே, காதி கிராமத் தொழில் வாரியம் தேன் கொள்முதல் விலையை ரூ. 150 ஆக உயா்த்தி தர உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்தாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: தேன் கொள்முதல் விலையை ரூ. 150 ஆக உயா்த்தி தர வேண்டுமென்ற மனுதாரா் கோரிக்கையை காதி, கதா் கிராமத் தொழில்கள் வாரியத் தலைமை செயல் அலுவலா் சட்டத்துக்கு உள்பட்டு பரிசீலித்து, எட்டு வாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

SCROLL FOR NEXT