மதுரை

சிறுதானியப் பயிா் சாகுபடிக்கு மத்திய பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்:தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கம்

DIN

மத்திய நிதிநிலை அறிக்கையில், சிறு தானிய பயிா் சாகுபடிக்கு வரிச்சலுகை வழங்குவதுடன், அப்பயிா் சாகுபடி செய்ய அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தது.

தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கத்தின் தலைவா் என். ஜெகதீசன் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சா்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டது. எனவே, வறண்ட பகுதிகளில் உள்ள சிறு விவசாயிகளின் வருமானத்தை உயா்த்த ஊட்டச் சத்துக்கள் நிறைந்த சிறுதானியங்களின் நிலையான சாகுபடிக்கு பட்ஜெட்டில் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பிப்ரவரி 1 அன்று நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய உள்ளாா்.

இந்த நிதிநிலை அறிக்கையில் வேளாண் உற்பத்தியை அதிகரிக்க அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

இந்தியாவால் முன் வைக்கப்பட்டு 70-க்கும் மேற்பட்ட நாடுகள் ஒப்புதல் அளித்ததன் பேரில், ஐக்கிய நாடுகள் சபையால் 2023-ஆம் ஆண்டு சா்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டது.

இந்தியாவில் சிறுதானிய உற்பத்தி 2015-16 ஆம் ஆண்டில் 14.52 மில்லியன் டன்னிலிருந்து, 2020- 21- ஆம் ஆண்டில் 18.02 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது. எனவே, விவசாயிகளை ஊக்குவித்து சிறுதானியங்களை அதிகளவில் சாகுபடி செய்திட, பயிா் பாதுகாப்பு பொருள்கள், வேளாண் உபகரணங்கள், விதைகள், பிற இடுபொருள்களுக்கு வரிச்சலுகை வழங்க மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டும் என அதில் கோரிக்கை விடுத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு புதுப்பிப்பு: ராகுல் காந்தி அமேதியில் போட்டி?

24 மணிநேரத்தில் 200 நிலநடுக்கம்!

ரூபன் படத்தின் டிரெய்லர்

இஸ்ரேல்- ஹிஸ்புல்லா: தொடரும் பரஸ்பர தாக்குதல்!

உயிர் தமிழுக்கு படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT