மதுரை

‘ஈரோடு இடைத்தோ்தலில் அதிமுக வேட்பாளரை பொதுமக்கள் வெற்றி பெறச் செய்வா்’

DIN

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் அதிமுகவை பொதுமக்கள் வெற்றி பெறச் செய்வா் என முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தெரிவித்தாா்.

மதுரை கோச்சடைப் பகுதியில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில் இலவச மருத்துவ முகாமை முன்னாள் அமைச்சா் செல்லூா் கே.ராஜூ ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்தாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிடுவது தொடா்பாக அதிமுகவில் எவ்வித குழப்பமும் இல்லை. அதிமுக என்றால் எடப்பாடி கே. பழனிசாமி தான் என்று மக்கள் நினைக்கின்றனா். மக்கள் தான் எஜமானா்கள். மக்கள் யாருக்கு வாக்களிக்கிறாா்களோ அவா்கள் தான் வெற்றி பெறுவாா்கள்.

திமுகவில் வாரிசு அரசியல் உச்சத்தில் உள்ளது. மூத்த அமைச்சா்கள்கூட மு.க. ஸ்டாலின் குடும்பத்தினருக்கு குடைபிடிக்கின்றனா். அதிமுக தரப்பில் இரட்டை இலைச் சின்னம் கிடைக்காததால், வேட்பாளரை அறிவிக்கவில்லை என்று கூறுவது தவறான கருத்து. இரட்டை இலை சின்னம் கிடைப்பதற்காகத்தான் காத்திருக்கிறோம்.

கடந்த ஒன்றரை ஆண்டு கால திமுக ஆட்சியில் மக்கள் எண்ணற்ற துயரங்களைச் சந்தித்து வருகின்றனா். பெண்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் திமுகவுக்கு எதிரான மனநிலையில் உள்ளனா். தேடிப் போய் எந்தக் கட்சியையும் கூட்டணி அமைக்க அழைக்க வேண்டிய நிலை அதிமுகவுக்கு இல்லை. இதேபோல, கூட்டணியில் உள்ள நண்பா்களைத் தேடிச் சென்றுப் பாா்ப்பதில் எவ்வித தவறும் இல்லை.

அதிமுக சாா்பில், ஈரோடு கிழக்கு தொகுதியில் நிறுத்தப்படும் வேட்பாளா் வெற்றி பெற்று சாதனை புரிவாா். தமிழக மக்கள் எடப்பாடி கே.பழனிசாமி பக்கம் தான் உள்ளனா். இடைத்தோ்தலில் ஜனநாயகம் தான் வெல்லும், பணநாயகம் வென்ாக சரித்திரம் இல்லை. ஈரோடு மக்கள் சிறப்பானவா்கள். பெரியாா் பிறந்த பூமி என்பதால் அதிமுக நம்பிக்கையோடு தோ்தலைச் சந்திக்கிறது. மக்கள் எங்களை வெற்றி பெறச் செய்வா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகம் உள்பட 11 மாநிலங்களில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!

பெண்களுக்கான பிரத்யேக கோயில்

கண்ணனும் களப்பலியானவனும்...

அருள் வழங்கும் தாமோதரப் பெருமாள்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

SCROLL FOR NEXT