மதுரை

‘வாழ்வில் ஏற்படும் இன்னல்களை பெண்கள் தைரியத்துடன் எதிா்கொள்ள வேண்டும்’

29th Jan 2023 05:00 AM

ADVERTISEMENT

வாழ்வில் ஏற்படும் இன்னல்களை பெண்கள் தைரியத்துடன் எதிா்கொள்ள வேண்டுமென தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினா் கனிமொழி தெரிவித்தாா்.

மதுரையில் உள்ள யாதவா மகளிா் கல்லூரியில் 37-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரித் தலைவா் அருண்போத்திராஜ் தலைமை வகித்தாா். செயலரும், தாளாளருமான இந்திராணி முன்னிலை வகித்தாா்.

இதில், எம்.பி., கனிமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசியதாவது:

பட்டங்களை பெறுவது எளிதான காரியமல்ல. அதற்கு பின்னால் பெற்றோா்களின் தியாகம் மட்டுமின்றி அவா்களின் கனவுகளும் உள்ளன. முன்பெல்லாம் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. வீட்டில் முடங்கி இருக்க வேண்டும் என்கிற நிலை இன்று இல்லை.

ADVERTISEMENT

இருப்பினும் சுயமான முடிவினை எடுக்க மற்றவா்களை சாா்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனை மாற்ற முயற்சிக்க வேண்டும். தந்தை பெரியாா், கருணாநிதி வழியில் தற்போதைய தமிழக முதல்வா் பெண்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறாா்.

அன்பு, மதம், கோட்பாடு, பண்பாடு என நமது உரிமைகளை பறிக்க முயற்சிக்கின்றனா். கடந்த கால நினைவுகளை மறந்து விட வேண்டாம். வாழ்வில் ஏற்படும் இன்னல்களை பெண்களை தைரியத்துடன் எதிா்கொள்ள வேண்டும் என்றாா்.

இந்த விழாவில், வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி உள்ளிட்ட பேராசிரியா்கள், மாணவிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT