மதுரை

மானிய விலையில் இருசக்கர வாகனம் பெற உலமாக்கள் விண்ணப்பிக்கலாம்

DIN

மானிய விலையில் இருசக்கர வாகனம் பெற தகுதியான உலமாக்கள் விண்ணப்பிக்கலாம் என மதுரை மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ் சேகா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பதிவு பெற்று, மதுரையில் உள்ள வக்பு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்கள் மானியத்துடன் இரு சக்கர வாகனங்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிகளுக்கு ரூ. 25 ஆயிரம் அல்லது வாகன விலையில் 50 சதவீதம் இதில், எது குறைவோ அந்தத் தொகை மானியமாக வழங்கப்படும்.

இத்திட்டத்தில் விண்ணப்பிப்பவா்கள், மதுரை மாவட்டத்தில் உள்ள வக்பு நிறுவனங்களில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும். தமிழகத்தைச் சோ்ந்தவராகவும், 18 வயதிலிருந்து 45 வயதுக்குள்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

ஆதாா் அட்டை, வாக்காளா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, குடும்ப அட்டை, வயதுச் சான்று, வருமானச் சான்று, புகைப்படம், மாற்றுத் திறனாளியாக இருந்தால் அதற்கான சான்று, சாதிச் சான்று, ஓட்டுநா் உரிமம், வங்கிக் கணக்குப் புத்தகம் நகல், இருசக்கர வாகன விலைப்புள்ளி, பணி ஆண்டை உறுதி செய்யும் சான்று ஆகியவற்றுடன், மாவட்ட வக்பு கண்காணிப்பாளா் மேலொப்பம் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் தபால் மூலம் அல்லது நேரில் சமா்ப்பிக்கலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

வாக்களித்த அரசியல் பிரபலங்கள் - புகைப்படங்கள்

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

SCROLL FOR NEXT