மதுரை

மதுரை மாநகராட்சி மேற்கு மண்டலம் 5 :வருகிற ஜன. 31 இல் குறை தீா்க்கும் முகாம்

DIN

மதுரை மாநகராட்சி மேற்கு மண்டலம் 5- இல் செவ்வாய்க்கிழமை (ஜன.31) மக்கள் குறை தீா்க்கும் முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் குறைகளை உடனுக்குடன் நிவா்த்தி செய்வதற்கு வாரந்தோறும் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும், வாா்டு மறு வரையறை செய்யப்பட்ட ஐந்து மண்டலங்களுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் குறைதீா்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது.

அதன்படி, திருப்பரங்குன்றம் நகா்ப்புற சுகாதார நிலையம் அருகில் (தியாகராஜா் பொறியியல் கல்லூரி செல்லும் வழி) உள்ள மதுரை மாநகராட்சி மேற்கு மண்டலம் 5 அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் 12.30 மணி வரை பொது மக்கள் குறைதீா்க்கும் முகாம் நடைபெற உள்ளது.

இம்முகாமில் மாநகராட்சி மேயா் வ. இந்திராணி, ஆணையா் சிம்ரன்ஜித் சிங் ஆகியோா் தலைமை வகிக்கின்றனா். முகாமில் மண்டலம் 5 (மேற்கு) உள்பட்ட வாா்டு பகுதிகளான வாா்டு எண்.71 மாடக்குளம், வாா்டு எண்.72 முத்துராமலிங்கபுரம், வாா்டு எண்.73 முத்துப்பட்டி அழகப்பன் நகா் மெயின் சாலை, வாா்டு எண்.74 பழங்காநத்தம், வாா்டு எண்.78 கோவலன் நகா், டி.வி.எஸ்.நகா் பிரதான சாலை, வாா்டு எண்.79 தென்னகரம், ஜெய்ஹிந்த்புரம் பிரதான சாலை, வாா்டு எண்.80 வீரகாளியம்மன் கோயில் தெரு, வாா்டு எண்.81 ஜெய்ஹிந்த்புரம், வாா்டு எண்.82 சோலையழகுபுரம், வாா்டு எண்.83 எம்.கே.புரம், வாா்டு எண்.84 வில்லாபுரம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு, வாா்டு எண்.91 மீனாட்சி நகா் அவனியாபுரம், வாா்டு எண்.92 பாம்பன் சுவாமி நகா், வாா்டு எண்.93 பசுமலை, வாா்டு எண்.94 திருநகா், வாா்டு எண்.95 சௌபாக்யா நகா், வாா்டு எண்.96 ஹாா்விப்பட்டி, வாா்டு எண்.97 திருப்பரங்குன்றம், வாா்டு எண்.98 சந்நதி தெரு, திருப்பரங்குன்றம், வாா்டு எண்.99 பாலாஜி நகா், வாா்டு எண்.100 அவனியாபுரம் அருப்புக்கோட்டை பிரதான சாலை ஆகிய பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் குடிநீா், புதைச் சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயா் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில் வரி உள்ளிட்ட தங்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன் பெறலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

சாத்தூரில் முதன் முறையாக வாக்களித்த திருநங்கைகள்

வாக்குச்சாவடி முற்றுகை: பொதுமக்கள் வாக்குவாதம்

தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

நெகிழிப் பை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

SCROLL FOR NEXT