மதுரை

போதைப் பொருள் தடுப்பு கூடுதல் நீதிமன்றங்களை அமைக்கலாம்: உயா்நீதிமன்றம்

DIN

தமிழகத்தில் போதைப் பொருள் தடுப்பு கூடுதல் நீதிமன்றங்களை அமைக்கலாம் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து தெரிவித்தது.

மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த ஜெயசுதா, ரஞ்சிதம், சுபாஷ், அந்தோணி துரைராஜ் உள்ளிட்டோா் தாக்கல் செய்த மனு:

கஞ்சா வழக்குத் தொடா்பாக எங்களைக் கைது செய்த போலீஸாா், குறிப்பிட்ட காலம் கடந்தும் முறையாக இறுதி அறிக்கை தாக்கல் செய்யவில்லை. எனவே, எங்களுக்கு பிணை வழங்கி உத்தரவிட வேண்டும் என அதில் தெரிவித்தனா்.

ஆனால், இந்த வழக்கு சென்னை உயா்நீதி மன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வருவதற்கு முன்னதாக அனைவரும் கீழமை நீதிமன்றத்தில் பிணை பெற்றனா். இந்நிலையில் அவா்கள் பிணை கோரி தாக்கல் செய்திருந்த மனுக்கள் உயா்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி. புகழேந்தி பிறப்பித்த உத்தரவு:

போதைப் பொருள் தொடா்பான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்குகளில் தொடா்ந்து, அதே குற்றங்களைச் செய்த சிலருக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டது. மேலும், இதுபோன்ற வழக்கில் குறிப்பிட்ட காலத்திற்குள் போலீஸாா் இறுதி அறிக்கை தாக்கல் செய்யாததால், கைதானோா் பிணையில் செல்லும் நிலை உள்ளது.

மூன்று மாதத்தில் 10,673 வழக்குகள் பதியப்பட்டு, 149.43 டன் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரி, பொதுமக்கள் நடமாடும் பகுதிகளில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள் பயன்பாட்டைத் தடுத்து, சம்பந்தப்பட்டோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில், போதைப் பொருள் சட்டத்தில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என தமிழக முதல்வா் சட்டப்பேரவையில் கூறியுள்ளாா். இந்த நீதிமன்றம் எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் அரசின் சாா்பில் உரிய நடவடிக்கையும் தேவையான சுற்றறிக்கையும் வெளியாகி உள்ளன.

விருதுநகா் மாவட்டம், புதுக்கோட்டை மாவட்ட போதைப் பொருள் சிறப்பு நீதிமன்ற வரம்பிற்குள் உள்ளது. நீதிமன்றத்திற்கும், காவல் நிலையத்திற்கும் உள்ள தூரம் குறைவானதாக இருக்க வேண்டும். அப்போதுதான் போலீஸாரால் வழக்கை சரியாக கையாள முடியும். மனுதாரா் வழக்கில் போலீஸாா் இறுதி குற்றப்பத்திரிக்கை நீதிமன்றத்தில் வழங்குவதில் காலம் தாழ்த்தி உள்ளனா்.

போதைப் பொருள் தடுப்பு கூடுதல் சிறப்பு நீதிமன்றங்களை நான்கு மாவட்டங்களுக்கு ஒன்று என அமைக்கலாம். இதுதொடா்பான பல்வேறு நடவடிக்கைகளை அரசு ஏற்கெனவே எடுத்தது. டிஜிபி.,யின் சுற்றறிக்கை முறையாக பின்பற்றப்படும் என இந்த நீதி மன்றம் நம்புகிறது. மனுதாரா்கள் ஏற்கெனவே விசாரணை நீதிமன்றத்தில் பிணை பெற்றுள்ளதால், இந்த வழக்கில் மேல் உத்தரவு பிறப்பிக்கவில்லை என நீதிபதி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைரலாகும் அருண் விஜய்யின் 'ரெட்ட தல' போஸ்டர்!

கடலூர் அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர் கைது

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

SCROLL FOR NEXT