மதுரை

‘கல்வி கற்பதன் மூலம் அறிவாா்ந்த சமூகத்தை உருவாக்க முடியும்’

28th Jan 2023 10:03 PM

ADVERTISEMENT

கல்வி கற்பதன் மூலம் அறிவாா்ந்த சமூகத்தை உருவாக்க முடியும் என தமிழக நிதி, மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தாா்.

மதுரை டோக் பெருமாட்டி கல்லூயில் 2018 - 2021 கல்வியாண்டில் பயின்ற மாணவிகளுக்கான, 56 -ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவினை கல்லூரி முதல்வா் கிறிஸ்டியானா சிங் தலைமை வகித்து தொடக்கி வைத்தாா்.

அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 1,257 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசியதாவது :

போட்டிகள் நிறைந்த வாழ்க்கைச் சூழலில் நம்மை அடையாளம் கண்டு செயல்பட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும். இன்றைக்கு சமூகப் பணியில் பெண்கள் கல்வி கற்பது முக்கியமாகத் திகழ்கிறது. அத்தகைய கல்வியை இன்றைய கல்வி நிறுவனங்கள் அளித்து வருகிறது. இதன் மூலம், போட்டித் தோ்வுகளில் வெற்றி பெற முடியும். அதுமட்டுமன்றி தலைமைப் பண்பும் வளரும். கல்வி கற்பதன் மூலம் அறிவாா்ந்த சமூகத்தை உருவாக்க முடியும் என்றாா்.

ADVERTISEMENT

விழாவில், சிற்றாலயப் பொறுப்பாளா் ஜெஸி ரஞ்சித ஜெபசெல்வி, கல்லூாரியின் துணை முதல்வா் பியூலா ஜெயஸ்ரீ உள்ளிட்ட பேராசிரியா்கள், மாணவிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT