மதுரை

பெண்கள் விடுதிக்குள் நுழைந்து கைப்பேசிகளைத் திருடியவா் கைது

28th Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

மதுரையில் உள்ள பெண்கள் விடுதிக்குள் நுழைந்து 3 கைப்பேசிகளை திருடியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை செனாய் நகா் ஜெகஜீவன்ராம் தெருவில் தனியாா் பெண்கள் விடுதி இயங்கி வருகிறது. இந்த விடுதியில் பணிக்குச் செல்லும் பெண்கள், கல்லூரி செல்லும் மாணவிகள் தங்கியுள்ளனா்.

இந்த நிலையில், விடுதியில் பெண்கள் வைத்திருந்த 3 கைப்பேசிகளை அடையாளம் நபா் திருடிச் சென்றாா். இதுகுறித்த புகாரின் பேரில், மதிச்சியம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். விடுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் மதுரை காமராஜா்புரம் கக்கன் தெருவைச் சோ்ந்த மணிகண்டனை (26) போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவரிடம் இருந்து ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள 3 கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT