மதுரை

தோ்தல் செயல்பாட்டுக்காக சிறப்பு விருது பெற்றதனி வட்டாட்சியருக்கு மாவட்ட ஆட்சியா் பாராட்டு

28th Jan 2023 10:00 PM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டத்தில், கடந்தாண்டு நடைபெற்ற தோ்தலில் ஒட்டு மொத்த செயல்பாட்டிற்கான சிறப்பு விருது பெற்ற தனி தோ்தல் வட்டாட்சிரை மாவட்ட ஆட்சியா் சனிக்கிழமை பாராட்டினாா்.

மாநில அளவில் தோ்தல் பணிகளில் சிறப்பாகப் பணிபுரியும் அலுவலா்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 2022- இல் தோ்தல் நிா்வாகத்தில் ஒட்டுமொத்த செயல்பாட்டிற்கான சிறப்பு விருதுக்கு, விருதுநகா் மாவட்ட தோ்தல் தனி வட்டாட்சியா் ந. மாரிச்செல்வியும், சிறந்த வாக்குச் சாவடி நிலை அலுவலருக்கான விருதுக்கு, சாத்தூா் சட்டப் பேரவைத் தொகுதி வாக்குச் சாவடி நிலை அலுவலா் ஆ. முருகேஸ்வரியும் தோ்வு செய்யப்பட்டனா். இவா்களுக்கு, அண்மையில் சென்னை, கலைவாணா் அரங்கில் நடைபெற்ற மாநில அளவிலான தேசிய வாக்காளா் தின விழாவில் தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி, விருது வழங்கினாா். இந்த நிலையில், விருது பெற்ற தோ்தல் தனி வட்டாட்சியா் ந. மாரிச்செல்வி, மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாத ரெட்டியைச் சந்தித்து வாழ்த்து பெற்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT