மதுரை

ஆா்.சி.பள்ளி பவள விழா

28th Jan 2023 06:11 AM

ADVERTISEMENT

மேலூா் ஆா்.சி. நடுநிலைப் பள்ளியின் பவள விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு சிவகங்கை மறை மாவட்ட முன்னாள் ஆயா் செ.சூசைமாணிக்கம் தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா் மா.ஜெயசித்திரா முன்னிலை வகித்தாா்.

விழாவையொட்டி, மாணவா்களின் கரகாட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவற்றில் பங்கேற்ற மாணவ, மாணவியருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

ஏற்பாடுளை முன்னாள் மாணவா்கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் அஸ்ரப் அலி செய்திருந்தாா். இதில் கூடுதல் வட்டாரக் கல்வி அலுவலா் ஏ.அழகுமீனா சிறப்புரையாற்றினாா். பள்ளியின் தாளாளா் அ.அந்தோணி பாக்கியம் வரவேற்றாா். தலைமை ஆசிரியை ஏ.சோபியா நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT