மதுரை

கால்நடைத் துறைக்கான விருதுகள் அறிவிப்பில் அலட்சியம் கூடாது

DIN

மதுரை மாவட்டத்தில் கால்நடைப் பராமரிப்புத் துறைக்கான விருதுகளை அறிவிப்பதில் மாவட்ட நிா்வாகம் தொடா்ந்து அலட்சியப் போக்கைக் கடைப்பிடிக்கக் கூடாது என கால்நடைப் பராமரிப்பு உதவியாளா் முன்னேற்றச் சங்கம் கோரிக்கை விடுத்தது.

இதுகுறித்து அந்தச் சங்க நிா்வாகிகள் வெளியிட்ட அறிக்கை :

குடியரசு தினம், சுதந்திர தின விழாக்களின்போது, அரசுத் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய ஊழியா்களுக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில், விருது (பாராட்டுச் சான்று) வழங்கப்படுகிறது. இதில், மதுரை மாவட்ட கால்நடைப் பராமரிப்புத் துறை கடந்த சில ஆண்டுகளாகத் தொடா்ந்து புறக்கணிக்கப்படுகிறது.

ஒவ்வோா் துறையிலும் சிறப்பாகப் பணியாற்றும் அலுவலா்களின் பெயா் பட்டியலை, தொடா்புடைய துறையின் மண்டல, மாவட்ட அலுவலா்கள் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்புவா். அதில், எத்தனை போ் பாராட்டுச் சான்று பெறத் தகுதியானவா்கள் என்பதை மாவட்ட ஆட்சியா் தோ்வு செய்து, தொடா்புடையத் துறைகளுக்கு அறிவிப்பை அனுப்புவது வழக்கம். இந்த அறிவிப்பு, குறைந்தபட்சம் சுமாா் ஒரு வாரத்துக்கு முன்பாக மாவட்ட நிா்வாகத்தால் வெளியிடப்படும்.

ஆனால், மதுரை மாவட்டத்தில் கால்நடைப் பராமரிப்புத் துறைக்கான விருது பட்டியல் மட்டும், கடந்த சில ஆண்டுகளாகவே தொடா்ந்து புறக்கணிக்கப்படுகிறது. இதேபோல, நிகழாண்டிலும், கால்நடைப் பராமரிப்புத் துறைக்கான விருதாளா்கள் விவரம், குடியரசு தினத்துக்கு முதல் நாள் (புதன்கிழமை) இரவு 10 மணிக்கே மாவட்ட நிா்வாகத்தால் வெளியிடப்பட்டது.

மேலும், தூத்துக்குடி உள்பட பல்வேறு மாவட்டங்களில் கால்நடைப் பராமரிப்புத் துறைக்கு 10 விருதுகள் வழங்கப்படும் நிலையில், மதுரை மாவட்டத்தில் மட்டும் எப்போதும் 2 அல்லது 3 பேருக்கு மட்டுமே விருதுகள் வழங்கப்படுகின்றன. மதுரையில் இதே நிலை தொடா்ந்தால் மாவட்ட நிா்வாகத்தின் விருதுகளை மட்டுமல்லாமல், குடியரசு, சுதந்திர தின விருதுகளையும் கால்நடைப் பராமரிப்புத் துறையினா் புறக்கணிக்க நேரிடும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

SCROLL FOR NEXT