மதுரை

மேலூா் பகுதியில் குடியரசு தினவிழா

27th Jan 2023 02:10 AM

ADVERTISEMENT

மேலூா்: மேலூா் ஊராட்சி ஒன்றியத்தில் குடியரசு தினத்தையொட்டி, ஒன்றியக்குழுத் தலைவா் க. பொன்னுச்சாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா். ஊராட்சி ஒன்றிய ஆணையா் பாலசந்தா், துணைத் தலைவா் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பேரையூா் உரிமையியல் நீதிமன்றத்தில் நீதிபதி வேலுச்சாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். இதில், நீதிமன்ற ஊழியா்கள், வழக்குரைஞா்கள் கலந்து கொண்டனா். பேரையூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் ரவிசந்திரன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். பேரையூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் இலக்கியா, பேரையூா் உள்கோட்ட கண்காணிப்பாளா் அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றினாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT