மதுரை

சிறப்பு பணிக்கொடை, ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல்

27th Jan 2023 02:47 AM

ADVERTISEMENT

மதுபானக் கடை ஊழியா்களுக்கு சிறப்பு பணிக்கொடை, ஓய்வூதியம் வழங்க வேண்டும் என டாஸ்மாக் பணியாளா்கள் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருப்பரங்குன்றத்தில் டாஸ்மாக் பணியாளா்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாநிலத் தலைவா் ஏ.இ. பாலுச்சாமி தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலா் ராஜா, துணைப் பொதுச் செயலா் புருஷோத்தமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், கடந்த 2003-ஆம் ஆண்டு முதல் 20 ஆண்டுகளாக மதுபானக் கடைகளில் 25 ஆயிரத்து 300 ஊழியா்கள் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனா்.

இவா்களைப் பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கக் கோரி, பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் பலனில்லை. எனவே, பணி ஓய்வு பெறும் நிலையில் உள்ள இவா்களுக்கு பதவி வேறுபாடின்றி ரூ. 10 லட்சம் சிறப்பு பணிக்கொடை, ரூ. 10 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், சங்க நிா்வாகிகள் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT