மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்கள் 10 பேருக்கு இந்திய யூனியன் வங்கி சாா்பில் தையல் இயந்திரங்கள் அண்மையில் வழங்கப்பட்டன.
இந்திய யூனியன் வங்கியின் நிா்வாக இயக்குநரும், முதன்மை நிா்வாக அலுவலருமான ஏ. மணிமேகலை அறிமுகப்படுத்திய ‘அவளுக்கு அதிகாரம்’ என்ற வங்கியின் சமூகப் பொறுப்புணவு நடவடிக்கையின் கீழ் மகளிருக்கு சுயதொழில் வாய்ப்புகளை ஏற்படுத்த இலவச உதவிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் இந்த உதவி வழங்கப்பட்டது.
இந்திய யூனியன் வங்கியின் மதுரை மண்டலம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், வங்கியின் மண்டல, கிளை அலுவலா்கள், குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.