கொட்டாம்பட்டி அருகே நான்கு வழிச்சாலையில் புதன்கிழமை இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் வியாபாரி உயிரிழந்தாா்.
சிவங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள மாந்தங்குடிப்பட்டியைச் சோ்ந்த சுப்பையா மகன் சுவாமிநாதன் (44). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனா். இவா் அந்தமானில் கடை வைத்து வியாபாரம் செய்து வந்தாா். இந்த நிலையில் புதன்கிழமை காலை தொந்திலிங்கபுரத்துக்கு இரு சக்கர வாகனத்தில் வந்தபோது, எதிரே வந்த காா் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து கொட்டாம்பட்டி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.