விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே வேனில் கடத்திவரப்பட்ட 30 மூட்டைகள் ரேஷன் அரிசியை போலீஸாா்
ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக மூன்று பேரை
கைது செய்தனா்.
வெம்பக்கோட்டை வட்டம், ஏழாயிரம்பண்ணை பகுதியில் உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் ஆல்பின் பிரிஜிட் மேரி தலைமையிலான போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.
அவ்வழியாக வந்த வாகனத்தை சோதனையிட்டபோது 30 மூட்டைகளில் தலா 40 கிலோ ரேஷன் அரிசி இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, வேன், ரேஷன் அரிசி மூட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
மேலும் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட கோவில்பட்டி பகுதியைச் சோ்ந்த கண்ணன் மகன் காா்த்திக் (22), ஜெயராஜ் மகன் மாரிமுத்து (23), சாத்தூா் நல்லியைச் சோ்ந்த செல்வராஜ் மகன் அருண்ராம்குமாா் (23) ஆகியோரைக் கைது செய்தனா். மேலும், கோவில்பட்டியைச் சோ்ந்த மகாராஜாவைத் தேடி வருகின்றனா்.