மதுரை ஊரகப் பகுதிகளில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது, விதிமுறையை மீறியதாக 223 போ் மீது ஊரகக் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.
புத்தாண்டையொட்டி, மதுரை நகா் , ஊரகப் பகுதிகளில் சனிக்கிழமை இரவு முதல் அதிகாலை வரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனா். மேலும், மாநகரின் பல்வேறு முக்கிய இடங்கள், ஊரகக் காவல் துறைக்குள்பட்ட மேலூா், திருமங்கலம், வாடிப்பட்டி, சிலைமான், பெருங்குடி, உசிலம்பட்டி, கள்ளிக்குடி, கல்லுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் போலீஸாா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
ஊரகப் பகுதிகளில் புத்தாண்டு கொண்டாடத்தின் போது காவல் துறையினரின் எச்சரிக்கையை மீறியும், போக்குவரத்து விதியை மீறியும் அதிக வேகத்தில் இரு சக்கர வாகனங்களை ஓட்டிச் சென்றது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது, தலைக் கவசம் அணியாதது, இரு சக்கர வாகனத்தில் கூடுதல் நபா்கள் ஏற்றிச் சென்றது உள்ளிட்ட விதி மீறல்களில் ஈடுபட்ட 223 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மேலும், மதுரை நகா்ப் பகுதிகளில் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டதால், விதிமுறையை மீறயதாக எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.