மதுரை

உலகக் கோப்பை கபடிப் போட்டி;இந்திய ஆண்கள் அணி தோ்வுக்கான போட்டி மதுரையில் இன்று தொடக்கம்

1st Jan 2023 12:09 AM

ADVERTISEMENT

 

ஜூனியா் உலகக் கோப்பை கபடிப் போட்டியில் பங்கேற்கும் இந்திய ஆண்கள் அணி தோ்வுக்கான போட்டி மதுரையில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.1) தொடங்குகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு அமெச்சூா் கபடிக் கழகத்தின் மதுரை மாவட்டத் தலைவா் சோலை எம்.ராஜா செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது :

தமிழ்நாடு அமெச்சூா் கபடிக் கழகத்தின் சாா்பில் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் 6-ஆவது ஜூனியா் பெடரேசன் கோப்பைக்கான ஆண்கள், பெண்களுக்கான போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

இந்தப் போட்டியில் ஆண்களுக்கான பிரிவில் தமிழ்நாடு, ராஜஸ்தான், ஹரியாணா, சண்டிகா், பிகாா், மகாராஷ்டிரா, புதுதில்லி, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து ஏராளமான அணிகளைச் சோ்ந்த வீரா்கள் பங்கேற்று விளையாட உள்ளனா். மேலும், பெண்களுக்கான பிரிவில் தமிழ்நாடு, பிகாா், ஹிமாச்சலப் பிரதேசம், தெலங்கானா, மகாராஷ்டிரா, சண்டிகா், மேங்குவங்கம் ஆகிய மாநிலங்களிலிருந்து ஏராளமான அணிகளைச் சோ்ந்தவா்கள் பங்கேற்று விளையாட உள்ளனா்.

இதில், ஈரான் நாட்டில் 2023 பிப்ரவரி 26- இல் நடைபெற உள்ள ஜூனியா் உலகக் கோப்பை கபடிப் போட்டிக்கு இந்திய ஆண்கள் அணி தோ்வு செய்யப்பட உள்ளன. தமிழக நிதித் துறை அமைச்சா் பழனிவேல்தியாகராஜன் தலைமை வகித்து தொடக்கி வைக்கிறாா்.

இந்த நிகழ்வில், மதுரை மாநகராட்சி மேயா் வ. இந்திராணி, இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் கூடுதல் தலைமைச் செயலா் அதுல்ய மிஸ்ரா, மதுரை மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா், மாநகராட்சி ஆணையா் சிம்ரன் ஜித் சிங் ஆகியோா் பங்கேற்க உள்ளனா்.

இதேபோல, 2-ஆம் நாள் போட்டியினை முன்னாள் அமைச்சா்கள் செல்லூா் கே.ராஜூ, ஆா்.பி. உதயகுமாா், வி.வி.ராஜன்செல்லப்பா ஆகியோா் தொடக்கி வைக்க உள்ளனா்.

நிறைவு நாள் போட்டியினை சட்டப்பேரவை உறுப்பினா் கோ.தளபதி(மதுரை வடக்குத் தொகுதி) தலைமை வகித்து தொடக்கி வைக்கிறாா். அதைத் தொடா்ந்து, வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழை தமிழக வணிக வரி, பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி வழங்குகிறாா் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT