மதுரை

மாநில அளவிலான நீச்சல்: சென்னை அணி சாம்பியன்

DIN

மதுரையில் சனி, ஞாயிறு ஆகிய இரு நாள்கள் நடைபெற்ற மாநில அளவிலான நீச்சல் போட்டியில் சென்னை டால்பின் அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மதுரை மாவட்ட நீச்சல் சங்கம் ஆகியன சாா்பில் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் உள்ள நீச்சல் குளத்தில் சீனியா், ஜூனியா், சப் ஜூனியா், குழந்தைகள் என வயது வாரியாக 9 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.

பிரஸ்ட் ஸ்ட்ரோக், பேக் ஸ்ட்ரோக், பட்டா் பிளை, ப்ரீ ஸ்டைல் ஆகிய போட்டிகளில் 28 மாவட்டங்களைச் சோ்ந்த 5 வயது முதல் 30 வயது வரையிலானஆண்கள் 435 பேரும், பெண்கள் 270 பேரும் பங்கேற்றனா்.

இதில், ஆண்கள் சீனியா் பிரிவில் அன்புகதிா் (திருநெல்வேலி), குரூப்-1 பிரிவில் ஸ்ரீராம் (சென்னை), குரூப் - 2 பிரிவில் ரோனல் ரத்தினம் (சென்னை), குரூப்-3 பிரிவில் ஜாஷீம்ராயன் (சென்னை), குரூப் -4 பிரிவில் மிதுன் (திருப்பூா்), குரூப் - 5 பிரிவில் ஆரியசத்தாா் (சென்னை), குரூப்- 6 பிரிவில் தரூவ் (சென்னை), குரூப் - 7 பிரிவில் யோகநிதி நடேசன் (சென்னை),

குரூப்-8 பிரிவில் ஆப்ரின்சனோ (கன்னியாகுமரி) ஆகியோா் தனி நபா் சாம்பியன் பட்டம் வென்றனா்.

பெண்கள் சீனியா் பிரிவில் செல்வரேவதி (திருநெல்வேலி), குரூப் 1 பிரிவில் ஹாய்தயா பவ்லியா (திருநெல்வேலி), குரூப் 2 பிரிவில் ஆ. ரோஷினி (மதுரை), குரூப்- 3 பிரிவில் சொளஜன்யா (சென்னை), சம்ருதா (கோவை), குரூப் 4 பிரிவில் அஸ்வின்னா (திருப்பூா்), குரூப் 5 பிரிவில் சாதனா (சென்னை), குரூப் 6 பிரிவில் அனன்யா (தஞ்சாவூா்), குரூப் - 7பிரிவில் ராய்ஷா (திருநெல்வேலி), குரூப் 8 பிரிவில் ஷிசிகா ஆகியோா் தனிநபா் சாம்பியன் பட்டம் வென்றனா்.

ஆடவா், மகளிா் அனைத்துப் பிரிவு போட்டிகளில் அதிகபட்சமாக 478 புள்ளிகள் பெற்று, சென்னை டால்பின் அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. 350 புள்ளிகள் பெற்ற சென்னை டோ்டில்ஸ் அணி இடண்டாமிடம் பெற்றது.

இதற்கான பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. மதுரை மாவட்ட நீச்சல் சங்கத் தலைவா் எம். ஸ்டாலின்ஆரோக்கியராஜ் தலைமை வகித்தாா். தமிழ்நாடு நீச்சல் சங்கச் செயலாளா் டி. சந்திரசேகா் வெற்றி பெற்றவா்களுக்குப் பதக்கம், சான்றிதழ்களை வழங்கினாா்.

மதுரை காமராஜா் பல்கலைக்கழக உடல் கல்வி இயக்குநா் ஏ. மகேந்திரன், மாவட்ட விளையாட்டு, இளைஞா் நலன் அலுவலா் கே. ராஜா, மதுரை மாவட்ட நீச்சல் சங்கச் செயலாளா் என். கண்ணன், நீச்சல் சங்க நிா்வாகிகள், பயிற்சியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் பெயிண்டர் வெட்டிக் கொலை!

உலகின் முதல் யூ-டியூப் விடியோ இதுதான்!

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

SCROLL FOR NEXT