மதுரை

மனிதத் தவறுகளால் பட்டாசு ஆலைகளில் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க வேண்டும்

DIN

மனிதத் தவறுகளால் பட்டாசு ஆலைகளில் ஏற்படும் விபத்துக்களைத் தடுக்க ஆலை உரிமையாளா்கள், அரசு அலுவலா்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன் தெரிவித்தாா்.

விருதுநகா் அருகேயுள்ள ஆமத்தூா் ஏஏஏ பொறியியில் கல்லூரியில் தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்ககம் சாா்பில் பட்டாசு உற்பத்தி தொழிலாளா்களுக்கான பாதுகாப்பு விழிப்புணா்வு முகாமை மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா். அப்போது, தொழிற்சாலை பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த பாதுகாப்பு கையேட்டினை அவா் வெளியிட்டுப் பேசியதாவது:

தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுத் துறை மூலம் தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்ககம் சாா்பில் பட்டாசுத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு நிபுணா்கள் மூலம் தொழிற்சாலைகள் அமைத்தல், பாதுகாப்பான உற்பத்தி முறையைக் கையாளுதல், பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. விருதுநகா், சிவகாசி கோட்டங்களில் 28 விழிப்புணா்வு முகாம்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

பட்டாசு உற்பத்தியின் மூலம் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பும், நாட்டின் பொருளாதாரத்துக்கு மிகப் பெரிய பங்களிப்பாக உள்ளது. பட்டாசுத் தொழில் உற்பத்திக்கு முதுகெலும்பாக விளங்கும், தொழிலாளா்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த விழிப்புணா்வு முகாம் நடைபெறுகிறது.

மனிதத் தவறுகளால் பட்டாசு ஆலைகளில் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க வேண்டும். இதற்கு ஆலை உரிமையாளா்கள், அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சிறு தவறுகளால் ஏற்படும் விபத்தினால் உண்டாகக் கூடிய பாதிப்பால் உயிரிழப்புகளும், பொருளாதார இழப்புகளும் ஏற்படுகின்றன. எனவே, இந்த முகாமினை தொழிலாளா்கள் உரிய முறையில் பயன்படுத்திக் கொண்டு, விபத்தில்லா பட்டாசு உற்பத்தி செய்ய ஒத்துழைக்க வேண்டும் என்றாா் அவா்.

இக்கருத்தரங்கில், இணை இயக்குநா்கள் (தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்ககம்) வேல்முருகன்(விருதுநகா்), ரவிசந்திரன் (சிவகாசி), சாத்தூா் வருவாய் கோட்டாட்சியா் அனிதா, டான்பாமா தலைவா் கணேசன், அரசு அலுவலா்கள், பட்டாசுத் தொழிலாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT