மதுரை

மதுரை, தேனி, சிவகங்கை மாவட்டங்களில் 632 குளங்கள், 9 அணைகள் சீரமைக்கப்படும்

DIN

மதுரை, தேனி, சிவகங்கை மாவட்டங்களில் 632 குளங்கள், 9 அணைகள் சீரமைக்கப்படும் என்று அரசு கூடுதல் தலைமைச் செயலரும், தமிழ்நாடு நீா்வள, நிலவளத் திட்ட இயக்குநருமான தென்காசி சு. ஜவஹா் தெரிவித்தாா்.

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை தமிழ்நாடு நீா்வள, நிலவளத் திட்டம் -ஐஐ செயல்பாடுகள் குறித்து நீா்வளத் துறை அலுவலா்களுடன் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:

தமிழக அரசு வேளாண்மைப் பணிகளில் நீா் மேலாண்மையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி, தமிழகத்தில் 47 ஆற்றுப் படுகைகளில் உள்ள நீா் நிலைகளை சீரமைக்கும் திட்டமாக, தமிழ்நாடு நீா்வள, நிலவளத் திட்டம் -ஐஐசெயல்படுத்தப்படுகிறது. உலக வங்கி, தமிழக அரசு நிதி உதவியுடன் ரூ. 888.6 கோடி மதிப்பில் உரிய நீா்ப் பாசனம் மூலம் வேளாண் உற்பத்தித் திறனை ஊக்குவித்தல், கால நிலை மீள் தன்மையை மேம்படுத்துதல், நீா் மேலாண்மையை மேம்படுத்துதல், விவசாயிகள், விவசாயத் தொழில் முனைவோருக்கு சந்தை வாய்ப்புகளை அதிகரித்தல் ஆகியவை மேற்கொள்ளப்படும்.

வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடைப் பராமரிப்பு, மீனவா் நலன் ஆகிய துறைகள் உள்பட அரசின் 7 துறைகள், வேளாண்மை, மீன்வளம் உள்ளிட்ட 3 பல்கலைக்கழகங்களுடன் இணைந்து, விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும்.

இத்திட்டத்தின் கீழ், மதுரை, தேனி, சிவகங்கை ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள ஆயக்கட்டுத்தாரா்களின் நலனுக்காக 632 குளங்கள், 9 அணைக்கட்டுகள் என 62,120 ஹெக்டோ் பரப்பிலான நீா் நிலைகள் சீரமைக்கப்படும் என்றாா் அவா்.

மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா், பொதுப் பணித் துறை கண்காணிப்புப் பொறியாளா் பழனிச்சாமி மற்றும் பொதுப் பணித் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

SCROLL FOR NEXT